இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சீரியல் நடிகை... ரசிகர்கள் வாழ்த்து!

By ச.ஆனந்த பிரியா

'நாதஸ்வரம்’ சீரியல் புகழ் நடிகை ஸ்ரீதிகா தனது இரண்டாவது திருமணம் பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிகா. ‘கோகுலத்தில் சீதை’, ‘மகராசி’ உள்ளிட்டப் பல சீரியல்களில் நடித்துள்ளார். ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘வேங்கை’ போன்ற படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு சனீஷ் என்பவருடன் திருமணம் நடந்தது.

பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இந்த ஜோடி பிரிந்தது. சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த ஸ்ரீதிகா ‘மகராசி’ சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஆர்யன் என்பவருடன் நட்பாகப் பழகினார். தொடர்ந்து ஃபோட்டோஷூட் செய்வது, ஜோடியாக ரீல்ஸ், யூடியூப் வீடியோக்கள் பகிர்வது என வலம் வந்த இந்த ஜோடி காதலை உறுதிப்படுத்தி, திருமணமும் முடித்திருக்கிறது.

இதுகுறித்தான அறிவிப்பை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ‘சில வருடங்களுக்கு முன்பு நானும் ஆர்யனும் எங்களுடைய முந்திய திருமண வாழ்வில் இருந்து பிரிந்தோம். இதற்காக யாரையும் குறை சொல்லி நெகட்டிவிட்டி பரப்ப விரும்பவில்லை. இதைவிட சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்பதை நாங்கள் நம்புகிறோம். எங்களுடைய நட்பு மற்றும் புரிதலைக் கொண்டு அடுத்தக்கட்ட வாழ்வில் இணைய முடிவு செய்திருக்கிறோம்.

ஸ்ரீதிகா- ஆர்யன்

எங்கள் பெற்றோர் ஆசியுடன் நானும் ஆர்யனும் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். விரைவில் புகைப்படங்கள், வீடியோக்கள், சோஷியல் மீடியாவில் பேட்டிகளும் கொடுக்கிறோம். எனது இன்ஸ்டாவில் முன்னாள் கணவர் பெயரை மாற்ற முடியாமல் இருக்கிறது.

அந்த டெக்னிக்கல் குளறுபடியையும் சரி செய்ய முயன்று வருகிறோம்’ என விளக்கம் கொடுத்துள்ளார். இந்த ஜோடியின் அடுத்தக் கட்ட திருமண வாழ்க்கைக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE