மாட்டுப்பால் மூலமாகவும் பரவும் பறவைக் காய்ச்சல்... கறந்த பாலை விற்கவும், அருந்தவும் தடை விதித்தது அமெரிக்கா!

By எஸ்.எஸ்.லெனின்

மனிதருக்கு பறவைக்காய்ச்சல் பரவலைத் தடுக்க கறந்த பாலின் விற்பனைக்கு தடை விதித்துள்ளது அமெரிக்கா.

பறவைக்காய்ச்சல் மாடுகளையும் பாதிப்பது அதிகரித்துள்ளதால் கறந்த கச்சா பாலை அருந்தவும், விற்கவும் தடை விதித்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், அதன் மாகாணங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஏவியன் இன்ஃப்ளுயன்ஸ்ஸா வைரஸால் முதல் மனித உயிர் பலியானதை கடந்த வாரம்(ஜூன் 5) உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்தது.

மாடு வளர்ப்பு

இதனையடுத்து அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் பல்வேறு மாகாணங்களில் கறவை மாடுகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவின் வேளாண்மைத்துறை அறிக்கையின்படி அங்குள்ள 82 மந்தைகளில் பறவைக்காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்தே அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம்(எஃப்டிஏ) மேற்கண்ட அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

கறந்த பாலை அருந்துவது என்பவது அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் ஏகனவே தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் ’மனித நுகர்வுக்கு அல்ல’ என்ற பிரிவின் கீழ் விற்பனையாவதை, பல்வேறு தேவைகளுக்காக மனிதர்கள் அருந்துவது தொடர்ந்து வருகிறது. இது தவிர்த்து சொந்தமாக கறவை மாடுகளை பராமரிப்போரும் கறந்த பாலை அருந்துவது வழக்கமாக உள்ளது. தற்போது இந்த போக்கு அனைத்துக்கும் அமெரிக்காவின் எஃப்டிஏ தடை விதித்துள்ளது. பச்சை பாலின் பல்வேறு பயன்பாடுகளிலும் பேஸ்டுரைஸ் செய்வதை எஃப்டிஏ கட்டாயமாக்கி உள்ளது.

பறவைக் காய்ச்சல் கண்காணிப்பு

அமெரிக்காவின் அறிவுறுத்தலை அடுத்து பல்வேறு உலக நாடுகளும் கறந்த பச்சை பாலை அருந்துவதை தடை செய்து வருகின்றன. பறவைக் காய்ச்சல் வைரஸ் மட்டுமன்றி, இதர விபரீத வைரஸ்கள், இகோலி, பாக்டீரியா தொற்றுகள் போன்றவை மனிதர்களை அதிகம் பாதிக்க வாய்ப்பாகிறது. அதே வேளையில் பேஸ்டுரைஸ் செய்வது அல்லது முறையாக காய்ச்சுவதன் மூலம் இந்த தொற்றுகள் நம்மை பாதிக்காது பாதுகாப்பு பெற முடியும்.

மற்றபடி பறவைக் காய்ச்சல் அதிகம் பரவிவரும் தற்போதைய சூழலில், காய்ச்சல், இருமல், தொண்டை புண், தசை வலி, தலைவலி, சுவாச பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு, வாந்தி, ஈறுகளில் ரத்தப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ உதவியை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE