சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினி டெல்லியில் இருந்து ஹைதராபாத் கிளம்புகிறார்.
பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று பதவியேற்ற நிலையில், முன்னதாக இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் டெல்லி சென்றார். இதனையடுத்து ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு நாளை மறுநாள் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்கிறார் ரஜினி.
இன்று ரஜினி கிளம்புவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தலும் நடந்து முடிந்தது. இதில் முன்பு ஆளும் கட்சியாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மோசமான தோல்வியைத் தழுவியது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனாவுடன் கூட்டணி அமைத்து 135 இடங்களைக் கைப்பற்றி வெற்றிப் பெற்றது.
சந்திரபாபு நாயுடு நாளை மறுநாள் முதல்வராகப் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான நல்லுறவு நீடித்து வருகிறது. ஆந்திராவில் கடந்த ஆண்டு என்டிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவை ’தீர்க்கதரிசி’ எனப் புகழ்ந்தார்.
மேலும் ஜெகன் மோகனால் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டபோதும் ரஜினிகாந்த் துடித்துப் போனார்.
இதையும் வாசிக்கலாமே...
பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!
சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!
இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!