கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

By ச.ஆனந்த பிரியா

நடிகர் விஜய், கவுண்டமணி- செந்திலின் வாழைப்பழக் காமெடியை ரீகிரியேட் செய்து மிமிக்ரி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயின் பிறந்தநாள் வரும் ஜூன் 22 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘துப்பாக்கி’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இந்த விஷயம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்

கேப்டன் ஜெகதீஷாக ஆக்‌ஷன், கமர்ஷியல் என எல்லா விஷயங்களும் சரியாக அமைந்து இந்தப் படம் ஹிட்டானது. இதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ‘துப்பாக்கி’ படத்தில் இருந்து டெலிட்டட் சீன் ஒன்றை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘கரகாட்டக்காரன்’ படத்தில் நடிகர்கள் கவுண்டமணி- செந்திலின் வாழைப்பழ காமெடியை நடிகர் விஜய் மிமிக்ரி செய்து ஜாலியாக கலாய்த்திருக்கிறார். இந்த வீடியோவை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பகிர்ந்து, ‘மும்பை போலீஸாரைக் குஷிப்படுத்த கேப்டன் ஜெகதீஷ் கவுண்டமணி -செந்தில் காமெடியை மிமிக்ரி செய்திருக்கிறார்’ எனக் கூறி இருக்கிறார்.

விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் 'GOAT' திரைப்படத்தில் நடித்து வருகிறார். செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE