பிரதமராக மோடி நாளை பதவியேற்கும் விழா கோலாகலம்.... உலகத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்!

By கவிதா குமார்

மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார். கோலாகலமாக நடைபெறும் இவ்விழாவில் உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது.கடந்த 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் பாஜக உள்பட எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான 272 தொகுதிகளில் வெற்றிபெறவில்லை.

மக்களவை தேர்தல் 2024

ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக முடிவு செய்தது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித்தலைவர்களின் கூட்டம் நடந்தது. அதில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவதற்க கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். புதிய அரசு அமைக்கப்படும்வரை காபந்து பிரதமராக செயல்படும்படி அவரை முர்மு கேட்டுக்கொண்டார். 17-வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரையையும் பிரதமர் மோடி அளித்தார். அதை ஏற்று மக்களவை கலைக்கப்பட்டது.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடியைத் தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை ராஜ்நாத்சிங் முன்மொழிந்தார். அதனை அமித்ஷா, நிதின் கட்காரி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வழிமொழிந்தனர்.

இதன்பின் ஜே.பி.நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரதிநிதிகள் குழு,குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து நாடாளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணி குழுத் தலைவராக மோடி தேர்வு செய்ததற்கான கடிதத்தை வழங்கியது. அத்துடன் கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் ஒப்படைக்கப்பட்டது. ,இதன் அடிப்படையில் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நரேந்திர மோடியை பிரதமராக குடியரசு தலைவர் முர்மு நியமித்தார்.

மோடி திரவுபதி முர்மு

இதைத்தொடர்ந்து, நேற்று மாலை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, ஆட்சி அமைப்பதற்கான அழைப்பு கடிதத்தைமோடி வழங்கினார். இதற்கிடையே, பிரதமர் மோடி பதவியேற்பு விழா, குடியரசு தலைவர் மாளிகையில் நாளை (ஜூன் 8) மாலை 7.15 மணிக்கு நடைபெறுகிறது. இதனையடுத்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கிறார். அவருககு திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். மத்திய அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்பவர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார்.

இதற்கான ஏற்பாடுகள் குடியரசு தலைவர் மாளிகையில் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை, வங்கதேசம், மொரிஷியஸ், நேபாளம் உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE