ரஷ்யாவில் அதிர்ச்சி: இந்திய மருத்துவ மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

By வ.வைரப்பெருமாள்

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே இந்திய மருத்துவ மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹர்ஷல் அனந்த்ராவ் தேசாலே, ஜிஷான் அஷ்பக் பிஞ்சாரி, ஜியா ஃபிரோஜ் பிஞ்சாரி, மாலிக் குலாம்கஸ் முகமது யாகூப் ஆகிய 4 பேர் மாணவர்கள், ரஷ்யாவில் மருத்துவம் பயின்று வந்தனர். இவர்கள் அங்கு வெலிகி நோவ்கோரோட் நகரில் உள்ள நோவ்கோரோட் மாநில பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.

உயிரிழப்பு

இந்நிலையில் இந்த மாணவர்கள் 4 பேர் மற்றும் மற்றொரு இந்திய மாணவி நிஷா பூபேஷ் சோனாவனே ஆகியோர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே வோல்கோவ் ஆற்றில் மூழ்கினர். இவர்களில் நிஷா பூபேஷ் சோனாவனே தவிர மற்ற 4 மாணவர்களும் உயிரிழந்தனர். நிஷா பூபேஷ் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த மாணவர்களில் இருவரது சடலங்களை மட்டும் உள்ளூர் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். மற்ற இருவரின் சடலங்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் மூழ்கிய அனைவரும் 18 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், தங்களுடன் பயின்று வந்த மாணவி, ஆற்றில் மூழ்கியதைத் தொடர்ந்து அவரை காப்பாற்ற முயன்று இவர்கள் 4 பேரும் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உயிரிழந்த மாணவர்களின் சடலங்களை விரைவில் உறவினர்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளோம். காப்பாற்றப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவில் 4 இந்திய மாணவர்கள், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அங்குள்ள இந்திய மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE