மக்களவை எம்.பிக்களின் அதிர்ச்சிப் பின்னணி... 93% கோடீஸ்வரர்கள்; 46% பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள்!

By எஸ்.எஸ்.லெனின்

எளிய மக்களின் பிரதிநிதிகளாக மக்களவைக்குச் செல்லும் எம்.பி.க்கள் கோடீஸ்வரர்களாக இருப்பதும், கிரிமினல் பின்னணியுடன் இருப்பதும் அவர்களை தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடும்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேர்வான எம்பி-க்களில் பெரும்பான்மையானவர்கள், அதாவது 93 சதவீதத்தினர் கோடீஸ்வரர்கள். அதே போன்று 46 சதவீத எம்பிக்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கின்றன. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு சங்கம் ஆகியவற்றின் சார்பில் இன்று வெளியான அறிக்கை இதனை தெரிவித்துள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவு

240 இடங்களை வென்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த பாஜக, அதிகபட்ச எண்ணிக்கையில் கோடீஸ்வரர்களைக் கொண்டுள்ளது. வெற்றி பெற்ற 240 பாஜக வேட்பாளர்களில் 95 சதவீதத்தினர், அதாவது 227 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். இவர்களின் சராசரி சொத்து ரூ.50.04 கோடியாகும். மேலும் பாஜகவின் எம்.பி.க்களில் 39 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

99 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, 93 சதவீத கோடீஸ்வரர்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வேட்பாளரின் சராசரி சொத்தும் ரூ22.93 கோடியாகும். அதே நேரத்தில் காங்கிரஸ் எம்பிக்களில் சரிபாதி பேர் மீது குற்ற வழக்குகள் இருக்கிறது. 46 சதவீதம் அதாவது வெற்றி பெற்ற 543 வேட்பாளர்களில் 251 பேர் தங்கள் மீதான குற்ற வழக்குகளை அறிவித்துள்ளனர். வெற்றி பெற்ற 543 வேட்பாளர்களில், 31 சதவீதம், அதாவது 170 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பாஜக, காங்கிரஸ்

பலாத்காரம், கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற வழக்குகள் கடுமையான குற்ற வழக்குகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 4 வேட்பாளர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் பாஜகவின் 63 பேரும், காங்கிரஸின் 32 பேர் மீதும் இத்தகைய கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அண்ணாமலை ஜெயிப்பார்... பந்தயத்தில் தோற்றதால் நடுரோட்டில் அமர்ந்து மொட்டையடித்துக் கொண்ட பாஜக பிரமுகர்!

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா? - சத்யபிரதா சாஹு பதில்!

மயக்க ஊசி போட்டதால் உயிரிழந்த 7 வயது சிறுவன்... அறுவை சிகிச்சையில் விபரீதம்!

அண்ணாமலை அதிகமாகவே பேசிட்டார்... கூட்டணி இருந்தால் 35 தொகுதிகள் வரை கிடைத்திருக்கும்; எஸ்.பி.வேலுமணி கருத்து!

பிறந்த நாள் விழாவில் பயங்கர மோதல்... கல்லூரி மாணவர் குத்திக்கொலை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE