’அரண்மனை4’ கொடுத்த பிரம்மாண்ட வெற்றி... ’காஞ்சனா4’ம் ரெடி!

By ச.ஆனந்த பிரியா

நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்து ‘காஞ்சனா4’ படத்தை எடுக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு இந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.

இந்த வருடம் தொடங்கியதில் இருந்தே தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் வராமல் இருந்தது, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. இதற்குப் பதிலாக, பிற மொழிப் படங்களும் ரீ-ரிலீஸ் படங்களுமே கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தின. நிலைமை இப்படி இருக்க, சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை4’ திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி நூறு கோடி வசூலை எட்டியது.

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு பூஸ்ட்டாக அமைய, இந்த ஹாரர் படங்களின் வரிசையில் ‘காஞ்சனா’ படத்தின் நான்காவது பாகத்தையும் தூசி தட்டி எடுக்க இருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ‘காஞ்சனா4’ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தொடங்க இருக்கிறது. படத்தை எழுதி, இயக்கி, அவரின் ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. நடிகர்கள் மற்றும் மற்ற தொழில்நுட்பக் குழுவினர்கள் குறித்தான விவரம் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...

அண்ணாமலை ஜெயிப்பார்... பந்தயத்தில் தோற்றதால் நடுரோட்டில் அமர்ந்து மொட்டையடித்துக் கொண்ட பாஜக பிரமுகர்!

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா? - சத்யபிரதா சாஹு பதில்!

மயக்க ஊசி போட்டதால் உயிரிழந்த 7 வயது சிறுவன்... அறுவை சிகிச்சையில் விபரீதம்!

அண்ணாமலை அதிகமாகவே பேசிட்டார்... கூட்டணி இருந்தால் 35 தொகுதிகள் வரை கிடைத்திருக்கும்; எஸ்.பி.வேலுமணி கருத்து!

பிறந்த நாள் விழாவில் பயங்கர மோதல்... கல்லூரி மாணவர் குத்திக்கொலை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE