மக்களவைத் தேர்தல் முடிவுகளையொட்டி சத்யராஜ் மகள் திவ்யா பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு, அவர் திமுகவில் சேரப்போகிறாரா என்ற பரபரப்பை பொதுவெளியில் உருவாக்கி உள்ளது.
நடிகர் சத்யராஜின் இரு வாரிசுகளில், மகன் சிபி சத்யராஜ் சினிமாவில் தடம் பதித்திருக்கிறார். மற்றொரு வாரிசான திவ்யா சத்யராஜ், தந்தையின் கொள்கைகள் மற்றும் அரசியல் பார்வையால் ஈர்க்கப்பட்டதில், அரசியலில் குதிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்த வகையில் நடப்பு மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதை முன்னிட்டு, திவ்யா சத்யராஜ் வெளியிட்டிருக்கும் சமூக ஊடகப் பதிவு, அவர் களமிறங்கப்போகும் அரசியல் முகாம் குறித்த விவாதங்களை கிளப்பி உள்ளது.
திவ்யா சத்யராஜ் அடிப்படையில் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். ஊட்டமான தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மட்டுமன்றி, இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் ஊட்டச்சத்து தொடர்பான பதிவுகள் வரவேற்பு பெற்றவை. தனது விசிறிகள் எழுப்பும் ஊட்டச்சத்து தொடர்பான கேள்விகளுக்கும் அவ்வப்போது திவ்யா பதிலளிப்பார். அன்றாட உணவுமுறையில் ஊட்டச்சத்துக்கு உலை வைக்கும் துரித உணவுகளின் பாதிப்புகள் குறித்தான விழிப்புணர்வையும் தொடர்ந்து அவர் வெளியிட்டு வருகிறார். இந்த வகையில் அவரது சமூக ஊடகப் பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. மருந்துப்பொருள் நிறுவனங்களின் மோசடி குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதிலும் திவ்யா கவனிக்கப்பட்டார்.
இதனிடையே மக்களவைத் தேர்தல் முடிவுகளையொட்டி இணைய உலக பிரபலங்கள் பலரும் தங்களது பார்வைகளை பதிவு செய்து வருவதன் மத்தியில் திவ்யா சத்யராஜ் நேற்றிரவு தனது பதிவை வெளியிட்டிருந்தார். அதில் ‘40/40 இது திராவிட மண். எப்போதே வெற்றி நமக்கே’ என்று பதிவிட்டிருந்தார். புதுவை மற்றும் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் வென்றுள்ளது. தேசத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் இந்த வெற்றிக்கு உலகம் முழுவதிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
அவற்றின் மத்தியில் திவ்யா சத்யராஜ் தனது பதிவை பகிர்ந்திருந்தார். ஆனால் அவர் கடந்த சில வருடங்களாகவே தனக்கு சமூகப்பணி மற்றும் அரசியலில் ஆர்வம் இருப்பதாக தெரிவித்து வருவதும், தனிப்பட்ட வகையில் அரசியல் அல்லது சமூக இயக்கம் தொடங்கி மக்கள் சேவையில் ஈடுபடப்போவதாகவும்’ அறிவித்து வந்திருக்கிறார். இவற்றின் மத்தியில் திவ்யா சத்யராஜ் திமுகவில் சேரப்போகிறாரா என்று இணையவாசிகள் அவரிடமே கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரது கொள்கைகளுக்கு சிறந்த புகலிடமாக திமுகவே இருக்கும் எனவும் அவர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். முன்னதாக 2019 மக்களவைத் தேர்தல் சமீபத்தில் மு.க.ஸ்டாலினை திவ்யா சத்யராஜ் நேரடியாக சந்தித்தபோது இதே விவாதம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
ஒரே நாளில் தங்கம் விலை ஒரே சவரனுக்கு ரூ.600 உயர்வு... மக்கள் அதிர்ச்சி!
டிரக்கிங் சென்ற கர்நாடகாவை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!
கடனைத் திருப்பிக் கேட்ட பெண் கொன்று புதைப்பு... 20,000 ரூபாய்க்காக கொடூரம்!
மத்திய அமைச்சர் ஆகிறாரா எச்.டி. குமாரசாமி? குறி வைக்கும் முக்கிய இலாகா!
வைகாசி மாத அமாவாசை... ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்