'பி' டீம் கட்சிகளான பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பாஜகவில் கரைந்துவிட்டன: காங்கிரஸ் கடும் தாக்கு

By வ.வைரப்பெருமாள்

கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை ஆதரித்து, பாஜகவின் 'பி' டீமாக இருந்து வந்த பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் பாஜகவில் கரைந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலும் இணைந்து நடத்தப்பட்டன. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி, ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியை வீழ்த்தி, பாஜக ஆட்சியைப் பிடித்தது. மக்களவைத் தேர்தலில் பிஜேடி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலாமல் வாஷ் அவுட் ஆனது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

இதேபோல் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (ஒய்எஸ்ஆர்சிபி) ஆட்சியை வீழ்த்தியது. அம்மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்நிலையில் பாஜகவின் 'பி' டீம் கட்சிகளாக செயல்பட்டு வந்த பிஜேடி, ஒய்எஸ்ஆர்சிபி ஆகிய கட்சிகள், தற்போது பாஜகவாகவே மாறிவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘கடந்த 10 ஆண்டுகளில், பிஜேடி, நாடாளுமன்றத்தில் பாஜகவின் பி டீமாக இருந்தது. அக்கட்சி ஒவ்வொரு பிரச்சினையிலும் நரேந்திர மோடியை ஆதரித்தது.

இதேபோல் கடந்த 10 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர்சிபி, பாஜகவின் மற்றொரு பி டீமாக இருந்தது. இக்கட்சியும் ஒவ்வொரு பிரச்சினையிலும் நரேந்திர மோடியை ஆதரித்தது. தற்போது இந்த இரு கட்சிகளிலும் பி டீமில் இருந்து ஏற்கெனவே தாங்கள் இருந்த அணியாகவே (பாஜக) மாறிவிட்டன’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE