இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், கடந்த 10 ஆண்டுகால நல்லாட்சி தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை.
மக்களின் இந்த பாசத்திற்காக நான் தலைவணங்குகிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், கடந்த 10 ஆண்டுகால நல்லாட்சி தொடரும்.
வெற்றிக்காகக் கடினமாக உழைத்த பாஜக தொண்டர்களை வணங்குகிறேன். அவர்களது கடின உழைப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி பாஜக தனிப்பெரும் கட்சியாக சுமார் 240 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 291 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் 99 இடங்களுடன் சேர்ந்து இந்தியா கூட்டணி 233 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 272 தொகுதிகளை பெறும் கட்சியால் ஆட்சியைக் கைப்பற்ற முடியும். எனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்