ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் அமெரிக்க அணிக்கு எதிராக 195 ரன்கள் இலக்காக கனடா நிர்ணயித்துள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய திவுகள் நாடுகளில் அந்நாட்டு நேரப்படி ஜூன் 1-ம் தேதி தொடங்கி ஜூன் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இந்த போட்டிகள் தொடங்கியுள்ளது. அதன்படி முதல் போட்டியில் கனடா மற்றும் அமெரிக்கா நாடுகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கனடா அணியில் ஆரோன் ஜான்சன் 23 ரன்களும், நவ்நீத் தலிவல் 61 ரன்களும், நிக்கோலஸ் கிரிட்டன் 51 ரன்களும், ஸ்ரேயாஸ் மோவா 32 ரன்களும் எடுத்து ஆட்டமிருந்தனர். இதை எடுத்து 20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை எடுத்தது.
அமெரிக்கா தரப்பில் அலி கான், ஹர்மித் சிங், கோரி ஆண்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். இதையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா அணி களம் இறங்கியுள்ளது.