நள்ளிரவில் பற்றி எரிந்த காவல் நிலையம்; தீயில் கருகிய ஆவணங்கள்!

By வ.வைரப்பெருமாள்

டெல்லி காஷ்மீர் கேட் காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆவணங்கள் எரிந்து நாசமானது.

டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட் மெட்ரோ காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு 12:45 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்து குறித்து டெல்லி தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயை கட்டுப்படுத்தி அணைக்க, சுமார் 12 தீயணைப்பு படை வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. ஆனால் அதற்குள் தீ மளமளவென காவல் நிலையம் முழுவதும் பரவியது.

இதில் காவல் நிலையத்தில் இருந்த ரேக்குகள், கோப்புகள், பொருள்கள் என அனைத்தும் எரிந்து நாசமாகின. காஷ்மீர் கேட் மெட்ரோ காவல் நிலையத்தில் மெட்ரோ துணை ஆணையர் அலுவலகமும் உள்ளது.

தீ விபத்தில் நாசமான பொருள்கள்

அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் எவ்வித உயிரிழப்புகளோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும், முழுமையான விசாரணைக்குப் பிறகே இது குறித்து தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர். டெல்லியில் காவல் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE