தென் மாவட்டங்களில் ஜாதிக் கொலைகள்... இயக்குநர் மாரி செல்வராஜின் நச் பதில்!

By ச.ஆனந்த பிரியா

தென் மாவட்டத்தில் ஜாதி கொலைகளை தடுக்க மாற்றம் தேவை என இயக்குநர் மாரி செல்வராஜ் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி கொடுத்துள்ளார்.

’பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ போன்ற படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் மாரிசெல்வரா. இப்போது துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் ‘பைசன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். தென் மாவட்டங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அவர் பேசியதாவது, “தென் மாவட்டத்தில் உளவியல் ரீதியாக அனைவர் மனதிலும் ஜாதி உள்ளது. இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது. எல்லோரும் சேர்ந்து ஒன்றாக சேர்ந்து நுணுக்கமாக கலைத்துறை, அரசியல் உள்ளிட்ட உள்ளிட்டவைகளின் மூலம் அழுத்தமான வேலையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அப்படி செய்தால் தான் அடுத்த தலைமுறையில் மாற்றமும் புரிதலும் வரும்” என்றார்.

தற்போது படங்கள் ஓடிடியில் படங்கள் வெளியாவது குறித்த கேள்விக்கு பதில் கூறும் போது, ”அனைவரும் வீட்டிலும் பூஜை அறை உள்ளது. இருந்த போதிலும் கோவிலுக்கு சென்று தான் சாமி கும்பிடுகிறார்கள்.

மாரி செல்வராஜ்

அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து படம் பார்ப்பது திரையரங்கில் தான்! அது என்றும் மாறாது” என தெரிவித்தார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு அரசியலுக்கு அனைவரும் வரலாம் என இயக்குனர் மாரி செல்வம் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE