50 வயது காதலியுடன் மீண்டும் பிரேக்கப் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நடிகர் அர்ஜூன் கபூர்.
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்தவர்கள் அர்ஜூன் கபூர்- மலைகா அரோரா. தயாரிப்பாளர் போனி கபூரின் மகன்தான் அர்ஜூன் கபூர். இவர் 50 வயதாகும் மலைகா அரோராவை டேட் செய்து வந்தார். இவருக்கும் அர்ஜூன் கபூருக்கும் 12 வயது வித்தியாசம்.
ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான மலைகாவுக்கு 20 வயதில் ஒரு மகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும் இவர்கள் இதேபோன்ற பிரேக்கப் சர்ச்சைகளை கடந்து வந்திருக்கிறார்கள். ஆனால், இந்த முறை இருவரும் பிரிய முடிவெடுத்து விட்டதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் பிரிந்தாலும் எப்போதும் இருவர் மனதிலும் அவர்களுக்கான ஸ்பெஷல் இடம் உண்டு என்பதையும் அர்ஜூன் - மலைகா வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
இந்த ஜோடியின் பிரேக்கப் செய்தி பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டாலும் இதுகுறித்து இருவரும் மெளனம் கலைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் ரிலேஷன்ஷிப் குறித்து சமூகவலைதளங்களில் வெளிப்படையாக பேசி, புகைப்படங்கள் பகிர்ந்து வந்த இந்த ஜோடி பிரேக்கப் செய்திகள் பற்றியும் மனம் திறந்து பேசுவார்களா என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் நெட்டிசன்கள்.
இதையும் வாசிக்கலாமே...
வேளாங்கண்ணி மாதாவிற்கு தங்ககிரீடம் அணியும் நிகழ்ச்சி... மனமுருக கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை!
விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வரும் பிரதமர் மோடி: வெளியானது புது வீடியோ
சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
பெங்களூரு விமான நிலையத்தில் தட்டித் தூக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா... அதிரடி காட்டிய எஸ்ஐடி!
வரலாறு காணாத வெப்பம்... 19 பேர் சாவு: மருத்துவமனையில் 40 பேர் அனுமதி!