உத்தரப் பிரதேசத்திலும் ‘திரிணமூல்’ பாணி அரசியல்... சமாஜ்வாதி, காங்கிரஸை தாக்கும் பிரதமர் மோடி!

By காமதேனு

உத்தரப் பிரதேசத்தில் "திரிணமூல் பாணியிலான அரசியலை" செய்ய சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் முயற்சித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி சார்பில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் லலிதேஷ் படி திரிபாதி பதோஹியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “மேற்கு வங்கத்தின் திரிணமூல் பாணி அரசியலை உத்தரபிரதேசத்தில் கொண்டுவர இந்தியா கூட்டணி சோதனை நடத்துகிறது. இங்கே சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் டெபாசிட் பெறுவதே கடினம். எனவே அவர்கள் பதோஹியில் அரசியல் சோதனை செய்கிறார்கள்.

திரிணமூல் காங்கிரஸ் அரசியல் என்றால் இந்துக்கள் கொலை, பட்டியலினத்தவர் மற்றும் ஆதிவாசிகள் துன்புறுத்தல், பெண்கள் மீதான வன்கொடுமைகள் இதுதான். பல பாஜக தலைவர்கள் அங்கு கொல்லப்பட்டனர் மற்றும் திரிணமூல் எம்எல்ஏக்கள் இந்துக்களை கங்கை நதியில் மூழ்கடித்து கொன்று விடுவோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்” என்று கூறினார்

அகிலேஷ் ராகுல் மம்தா பானர்ஜி

தொடர்ந்து பேசிய அவர், “மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் செய்யும் அரசியல் உங்களுக்குத் தெரியும். அக்கட்சியின் அரசியல் என்பது "அமைதியின் நச்சு அம்பு" ஆகும். ராமர் கோயிலை "தூய்மையற்றது" என சொல்லுதல், ராமநவமி கொண்டாட்டங்களை தடை செய்தல், வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு அடைக்கலம் அளித்தல் மற்றும் "ஓட்டு ஜிஹாத்" ஆகியவை தான் திரிணமூல் அரசியல். இது சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்கள் பயன்படுத்திய வார்த்தைகள்தான்.

மாநிலத்தில் முந்தைய சமாஜ்வாதி கட்சி அரசாங்கத்தின் கீழ், பயங்கரவாதிகளுக்கு சிறப்பு மரியாதை கிடைத்தது. அதேபோல இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் (சிமி) மீது சமாஜ்வாதி அரசாங்கம் கருணை காட்டியது” என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி 62 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 17 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 74 இடங்களிலும், அப்னா தள் மற்றும் ஆர்எல்டி கட்சி தலா 2 இடங்களிலும், எஸ்பிஎஸ்பி மற்றும் நிசாத் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE