தான் மத்திய வேளாண் துறை அமைச்சராக இருந்தபோது, குஜராத் மாநில விவசாய பிரச்னைகளுடன் அப்போதைய அம்மாநில முதல்வர் (தற்போது பிரதமர்) நரேந்திர மோடி தன்னை வந்து சந்திப்பார் என மகாராஷ்டிரா மூத்த அரசியல் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, தேசியவாத கங்கிரஸ் கட்சி (சரத் பவார் பிரிவு) தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாரை, விவசாயிகளின் பிரச்சினையை மையப்படுத்தி கடுமையாக விமர்சித்தார்.
பிரதமர் மோடி பேசுகையில், “மத்திய விவசாயத் துறை அமைச்சராக இருந்தபோது விவசாயிகளின் நலனுக்காக சரத் பவார் எதுவும் செய்யவில்லை" என குற்றம் சாட்டினார்.
இதேபோல், முந்தைய பிரச்சாரங்களில், "கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் விவசாயிகள் பெரிதும் பயனடைந்தனர். விவசாயிகளை கைவிட்ட சரத் பவார், அவர்களின் நலனுக்காக எதையும் செய்யவில்லை” என பிரதமர் மோடி சரத் பவாரை கடுமையாக சாடினார்.
இந்நிலையில் பிரதமரின் விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ள சரத்பவார், குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, அவரது மாநிலத்தில் விவசாயத் துறை நெருக்கடியை சந்தித்தது. அப்போது தான் உதவிய பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.
சரத் பவார் கடந்த 2004 முதல் 2014 வரை மத்திய வேளாண் துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தான் உதவியது குறித்து சரத் பவார் கூறுகையில், “ நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, விவசாயத் துறை பிரச்சினைகளை என்னிடம் வந்து தெரிவித்து, குஜராத்துக்கும் அழைத்துச் சென்றார்.
ஒருமுறை அவர் இஸ்ரேலுக்கு செல்ல விரும்பியதால் அவரையும் அங்கு அழைத்துச் சென்றேன். இப்போது நரேந்திர மோடி என்ன சொன்னாலும் அதுபற்றி நான் கவலைப்படவில்லை" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்
வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!
கடமை தவறிய இன்ஸ்பெக்டர், பெண் காவலர் சஸ்பெண்ட்... இளம்பெண் கொலை வழக்கில் பரபரப்பு!
கோவை பேருந்தில் சடலமாக மீட்கப்பட்ட ஐ.டி பெண் ஊழியர்... ஓட்டுநர், நடத்துநர் அதிர்ச்சி!