எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் சென்ற ஓட்டுநர்... சுரங்கப்பாதை மழை நீரில் சிக்கிய அரசுப் பேருந்து; வீடியோ வைரல்!

By காமதேனு

பொதுமக்கள் எச்சரிக்கையை மீறி, சுரங்கப் பாதையை கடக்க முற்பட்ட தமிழக அரசு பேருந்து வெள்ளத்தில் சிக்கியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமூக வலைதளத்தில் அரசுப் பேருந்து ஒன்று, மக்கள் எச்சரிக்கையை மீறி சென்று சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சுரங்கப் பாதையை அரசுப் பேருந்து ஒன்று கடக்க முற்படும்போது, குடைபிடித்துக் கொண்டு வரும் ஒருவர் சுரங்கப் பாதையை கடக்க முடியாது, போகாதீர்கள் என எச்சரிக்கிறார். இருப்பினும் பேருந்து ஓட்டுநர், அஜாக்கிரதையாக சுரங்கப்பாதையை கடந்து செல்ல முற்பட்டார்.

அப்பகுதியில் பெய்த கனமழையால் சுரங்கப்பாதையில் 4 அடிக்கும் மேலாக வெள்ள நீர் தேங்கியிருந்தது. இந்நிலையில் சுரங்கப் பாதையின் நடுப்பகுதிக்கு பேருந்து சென்றபோது, மழை நீரில் சிக்கி நின்றது. இந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பலரும் பகிர்ந்து, பொதுமக்களின் பேச்சை கேட்காவிட்டால் இதுதான் நிலை என கேலியாக பதிவிட்டு வருகின்றன. இதற்கிடையே, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று, பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டு, பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

சுரங்கப் பாதையில் மழை நீரில் சிக்கிக் கொண்ட அரசுப் பேருந்து

இதற்கிடையே இந்த விவகாரத்தில் குளச்சல் பணிமனையை சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிக்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நாகர்கோவில் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

கடமை தவறிய இன்ஸ்பெக்டர், பெண் காவலர் சஸ்பெண்ட்... இளம்பெண் கொலை வழக்கில் பரபரப்பு!

கோவை பேருந்தில் சடலமாக மீட்கப்பட்ட ஐ.டி பெண் ஊழியர்... ஓட்டுநர், நடத்துநர் அதிர்ச்சி!

26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அவசர உத்தரவு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE