இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவோம்... மனம் மாறிய மம்தா பானர்ஜி!

By காமதேனு

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அதற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பேன் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் பெரும் பங்கினை வகித்தார். ஆனால், தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸுடன் ஏற்பட்ட மோதலால் அவர் இந்தியா கூட்டணியின் செயல்பாடுகளில் இருந்து விலகியிருந்தார்.

இந்த சூழலில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் அதற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பேன் என்று முதல்வர் இன்று கூறியுள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், "நாங்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவை வழங்குவோம், வெளியில் இருந்து அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவுவோம். மேற்கு வங்கத்தில் எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளாத வகையில் நாங்கள் ஒரு அரசாங்கத்தை அமைப்போம். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்கள் வழக்கம்போல பணி செய்யலாம்" என்று அவர் கூறினார்.

இந்தியா கூட்டணி

மேலும், " பெங்கால் காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) ஆகிய இரண்டும் எங்களுடன் இல்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அந்த இருவரும் பாஜகவுடன் உள்ளனர். நான் டெல்லியில் உள்ள இந்தியா கூட்டணி பற்றி பேசுகிறேன்" என்று அவர் கூறினார்.

நாட்டின் 70 சதவீத இடங்களுக்கான தேர்தல் நிறைவடைந்த நிலையில், மம்தா பானர்ஜி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் 42 மக்களவைத் தொகுதிகளில், இதுவரை நடந்த 4 கட்ட தேர்தல்களில் 18 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மேலும் இன்னும் 3 கட்டங்களில் மீதமுள்ள 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பாஜக தனித்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

தேர்வு எழுத அனுமதி மறுப்பு... ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவர் தற்கொலை!

பாடகி சுசித்ராவுக்கு முன்னாள் கணவர் கொடுத்த ரியாக்‌ஷன்... வைரலாகும் வீடியோ!

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்... ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!

ஷாக்... இந்து இளைஞரை திருமணம் செய்த முஸ்லிம் பெண் மீது கொலைவெறி தாக்குதல்!

டெல்லி, ராஜஸ்தானைத் தொடர்ந்து கான்பூரிலும் அதிர்ச்சி... 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE