ராகுல் காந்தி அயோத்தி ராமர் கோயிலுக்கு வராத காரணம் இதுதான்... அமித் ஷா காட்டம்!

By காமதேனு

முஸ்லிம் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்பதால்தான் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள துலே மாவட்டம் மற்றும் வசாய் ஆகிய இடங்களில் தேர்தல் பேரணிகளில் உரையாற்றிய அமித் ஷா, “திருப்திப்படுத்தும் அரசியலின் காரணமாக ஜம்மு காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை காங்கிரஸ் நீக்கவில்லை. ராகுல் காந்தி தனது வாக்கு வங்கியான பெண்டி பஜாரின் ( தெற்கு மும்பையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும்பகுதி) வாக்கு வங்கியை இழக்க நேரிடும் என்ற பயத்தில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்குச் செல்லவில்லை.

ராகுல் காந்தி

சோனியா-மன்மோகன் சிங் அரசு 12 லட்சம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டது. ஆனால், நரேந்திர மோடி அரசு மீது கடந்த 10 ஆண்டுகளில் அப்படி எந்த குற்றச்சாட்டும் இல்லை. பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பிடம் மென்மையாக நடந்து கொண்டவர்களுடன் உட்காருவது உங்களுக்கு வசதியாக இருக்கிறதா என்று உத்தவ் தாக்கரேவிடம் கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் பொது சிவில் சட்டத்துக்கு எதிரானது, ஆனால் நாங்கள் அதை நிச்சயமாக அறிமுகப்படுத்துவோம். ஷரியா சட்டத்தின்படி இந்த அரசாங்கம் இயங்காது” என்று அவர் கூறினார்.

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா

மேலும், “ராகுல் காந்தியும் காங்கிரஸும் வீர சாவர்க்கரை அவமதித்தனர். இது பற்றி தாக்கரே என்ன சொல்கிறார்?. எனக்கும் உத்தவ் தாக்கரேவிடம் இருந்து விளக்கம் வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை அவமதித்துள்ளார். உத்தவ் அவர்களுடன் உடன்படுகிறாரா?. ராகுல் காந்தியால் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க முடியுமா?. நாட்டில் நக்சலிசத்தையோ அல்லது பயங்கரவாதத்தையோ அவரால் ஒழிக்க முடியுமா? அவர்களால் இந்தியாவை செழிக்க வைக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் வாசிக்கலாமே...

குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE