உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலியில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தியிடம், கூட்டத்திலிருந்து அவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பிரச்சாரத்தின் இடையே ராகுல் காந்தியிடம், அவரது திருமணம் குறித்து கூட்டத்திலிருந்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு புன்னகைத்தவாறே பதிலளித்த ராகுல் காந்தி, “நான் விரைவில் திருமணம் செய்து கொள்வேன்" என்றார்.
தொடர்ந்து பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது, “அதானி மற்றும் அம்பானியின் நலனுக்காக பாடுபடும் பிரதமர் நரேந்திர மோடியைப் போன்று இல்லாமல், எனது குடும்பம் எப்போதும் தொகுதி மக்களுக்காக உழைத்தது. அவர்களால் (பாஜக) 22 பில்லியனர்களை உருவாக்க முடிந்தால், நாம் கோடிக்கணக்கான லட்சாதிபதிகளை உருவாக்க முடியும்.
ஜூன் 4ம் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆண்டு தோறும் அந்த பெண்ணின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும். ரேபரேலியுடன் எங்களுக்கு 100 ஆண்டுகால உறவு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நான் என் அம்மாவிடம் சொன்னேன்.
எனக்கு இரண்டு தாய்மார்கள் (சோனியா காந்தி, இந்திரா காந்தி) உள்ளனர் என்று நான் ஒரு வீடியோவில் சொன்னேன். குழந்தைக்கு வழியைக் காட்டி பாதுகாப்பவள் தாய். என் அம்மாவும் இந்திரா ஜியும் எனக்காக இதைச் செய்தார்கள். இது எனது இரு தாய்மார்களின் 'கர்மபூமி'. இதனால்தான் நான் ரேபரேலியில் போட்டியிட வந்துள்ளேன்.
ராகுல் காந்தி குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்படும் ரேபரேலி தொகுதியானது கடந்த 2004ம் ஆண்டு முதல் சோனியா காந்தியால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு வந்தது. இந்தத் தொகுதியை முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரும் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
தனது பாட்டி இந்திரா காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தி மற்றும் தாயார் சோனியா காந்தி ஆகியோர் தொகுதி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்டதாக ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தில் கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!
திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்
தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு
ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்ஷன் என்ன?
காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!