துஷ்யந்த் சவுதலாதான் வில்லன்... ஜேஜேபி கட்சியை உடைக்கும் எம்எல்ஏக்கள் - ஹரியாணாவில் அடுத்த பரபரப்பு!

By காமதேனு

ஜேஜேபி எம்எல்ஏக்கள் சார்பில் துஷ்யந்த் சவுதாலா நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாது என்றும், ஜேஜேபியின் 10 எம்எல்ஏக்களில் 8 பேர் துஷ்யந்துக்கு எதிரானவர்கள் என்றும் அக்கட்சியின் எம்எல்ஏ தேவேந்திர சிங் பாப்லி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஹரியாணா முன்னாள் துணை முதல்வரும், ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவருமான துஷ்யந்த் சவுதாலா, அம்மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஹரியாணா முன்னாள் அமைச்சரும், ஜனநாயக் ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான தேவேந்திர சிங் பாப்லி துஷ்யந்துக்கு எதிராக கிளர்ச்சியை தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய பாப்லி, “துஷ்யந்திற்கு அவரது தாயார் நைனா சவுதாலாவின் ஆதரவு மட்டுமே உள்ளது, மற்ற எம்எல்ஏக்கள் அவரை ஜேஜேபி சட்டமன்றக் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்ற விரும்புகிறார்கள். அவர் பதவி விலக வேண்டும். இல்லையெனில், ஜேஜேபி எம்எல்ஏக்கள் அவரை பதவி நீக்கம் செய்வார்கள். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன், எங்கள் சட்டமன்ற கட்சி தலைவரை மாற்றுவோம். நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்படும் போது யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து முடிவெடுப்போம்.

2019 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, துஷ்யந்த் சவுதாலா பாஜகவுக்கு ஆதரவளித்தார், நான்கரை ஆண்டுகள் அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருந்தார். இப்போது அவர் பாஜக அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பார்க்கிறார். துஷ்யந்தின் சித்தாந்தம் மாறிவிட்டது. இப்போது அவர் காங்கிரஸை ஆதரிப்பது பற்றி பேசுகிறார், முன்பு அவர் காங்கிரஸை மிகப்பெரிய எதிரி என்று அழைத்தார்.

தேவேந்திர சிங் பாப்லி

துஷ்யந்த் சவுதாலாவின் குடும்பம் ஜேஜேபியை ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக ஆக்கியது. கட்சிக்கு ஜன்நாயக்கின் பெயர் சூட்டப்பட்டுள்ளது, ஆனால் துஷ்யந்த் வில்லனாக மாறிவிட்டார். அவரது ஆணவம் மற்றும் சர்வாதிகாரம் காரணமாக ஜேஜேபியின் எட்டு சட்டமன்ற உறுப்பினர்களும் ஹரியானா பொதுமக்களும் அவருக்கு எதிராக உள்ளனர். அவர் துணை முதல்வராக பதவியேற்ற பிறகு மற்ற வேலைகளில் மும்முரமாக இருந்து, கட்சி எம்எல்ஏக்களிடம் இருந்து விலகி இருந்தார். துஷ்யந்த், பொது இடங்களில் எங்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களால் எங்கள் குரலை அடக்க முடியாது”என்று பாப்லி கூறினார்.

இன்னும் சில நாட்களில் துஷ்யந்த் சவுதாலாவின் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி ஜேஜேபி எம்எல்ஏக்கள் களமிறங்குவார்கள் என சொல்லப்படுகிறது. ஜேஜேபியை உடைப்பதற்கான திட்டத்தை உருவாக்க, மூன்று ஜேஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாரை நேற்று சந்தித்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

துஷ்யந்த் சவுதாலா

துஷ்யந்த் சவுதாலாவுக்கு இப்போது அமர்ஜித் தண்டா, குருகிராமில் சிகிச்சை பெற்று வரும் அனூப் தனக் மற்றும் நைனா சௌதாலா ஆகியோரின் ஆதரவு உள்ளது. நான்கு கிளர்ச்சி எம்எல்ஏக்கள் பாஜக தலைமையுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களான ராம் கரண் கலா மற்றும் ஈஸ்வர் சிங் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

முன்னதாக மார்ச் மாதம் ஜனநாயக் ஜனதா கட்சி அப்போதைய மனோகர் லால் கட்டார் அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்றது. இதனைத் தொடர்ந்து நயாப் சிங் சைனி பாஜக சார்பில் முதல்வராக்கப்பட்டார்.

ஹரியாணா சட்டசபையில் பாஜகவுக்கு 40 உறுப்பினர்களும், இரண்டு சுயேச்சைகள் மற்றும் ஹரியாணா லோகித் கட்சியின் கோபால் காந்தா ஆகியோரின் ஆதரவு என அதன் பலம் 43 ஆக உள்ளது. தற்போது 88 என்ற பலத்துடன் உள்ள சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 45 இடங்கள் தேவை, ஆனால் பாஜகவுக்கு பெரும்பான்மைக்கு இரண்டு இடங்கள் குறைவாக உள்ளது. காங்கிரஸுக்கு 30 சட்டமன்ற உறுப்பினர்கள், ஜே.ஜே.பிக்கு 10 மற்றும் இந்திய தேசிய லோக்தளம் கட்சிக்கு ஒரு உறுப்பினர் உள்ளனர். ஒரு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் தனது நிலைப்பாட்டை இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE