உஷார்... அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை!

By காமதேனு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ,அரியலூர் , தஞ்சை, திருவாரூர் ,மயிலாடுதுறை , நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதே பகுதிகளில் நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஜன.7-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

மழை

மேலும் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ,அரியலூர் , தஞ்சை, திருவாரூர் ,மயிலாடுதுறை , நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE