மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

By காமதேனு

மாணவர்கள் மதிப்பெண்கள் பின்னால் ஓடாமல் தங்களுடைய தனிப்பட்ட திறமைகளையும் வளர்த்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்று. மதிப்பெண்களை விட ஒருவரின் தனித்திறமைகளே முக்கியம் என்பதை புரிந்து கொண்டு மாணவர்கள் இயங்க வேண்டும் என்கிறார் கல்வியாளர் ஆனந்தம் செல்வகுமார்.

இதுகுறித்து காமதேனு டிஜிட்டல் தளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “மாணவர்கள் இப்போது எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும் அதை எல்லாம் ஓரம் வைத்துவிட்டு, ’உன்னிடம் என்ன தனித்திறமை இருக்கிறது?’ என்றுதான் நிறுவனங்கள் எதிர்பார்க்கிறது. ஒரு நேர்காணலில் உங்கள் படிப்பிற்கு கிடைப்பது வெறும் 30% மதிப்பெண்கள்தான். உங்கள் பர்சனாலிட்டி, தனித்துவமான திறன்கள் இவற்றிற்கு தான் 70% மதிப்பெண்கள் கிடைக்கிறது.

தனித்திறன்களோடு புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் உங்களுக்கு இருக்கிறதா என்பதையும் வேலை தரும் நிறுவனங்கள் முதல் தகுதியாக கவனிக்கிறது. படிப்போடு சேர்த்து அதோடு தொடர்புடைய கோர்ஸ் அல்லது உங்களுக்கு ஆர்வம் இருக்கும் பிற விஷயங்களையும் கற்றுக் கொள்ளுங்கள். இதற்கெல்லாம் பணம் வேண்டுமா என்றால் நிச்சயம் இல்லை. யூடியூபில் அத்தனை கோர்ஸ் இலவசமாக உங்களுக்குக் கிடைக்கிறது.

இதற்கடுத்து, எல்லோருடனும் சுமுகமாக நீங்கள் பழகுகிறீர்களா என்ற விஷயத்தை நிறுவனங்கள் உற்று நோக்குகிறது. பத்துபேரை ஒரு டீமாக உன்க்களிடம் கொடுத்தால் அவர்களை அரவணைத்துப் போகும் ஆளுமைத் திறன், மூன்றாவது முடிவெடுக்கும் திறன் உங்களிடம் இருக்கிறதா என்பதையும் பார்ப்பார்கள்.

மாதிரிப் படம்

இதெல்லாம் நீங்கள் பணம் கொடுத்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. உங்கள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, டீச்சர் என இவர்களிடம் இந்த திறன்கள் இருந்திருக்கும். ஆனால், நீங்கள் கவனிக்க தவறியிருப்பீர்கள். இப்போது கையில் வைத்திருக்கும் மொபைலில் யூடியூப் மூலமாக இதை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளலாம்.

கடைசி வரை நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதில்லை. நீங்கள் ஒரு நிறுவனம் தொடங்கலாம், தனியாக பிசினஸ் செய்யலாம், அரசியலில் இறங்கலாம். இதற்கெல்லாம் அடிப்படை மேலே சொன்ன மூன்று விஷயங்கள் தான்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE