பேருந்து இருக்கை கழன்று நடத்துநர் சாலையில் விழுந்த விவகாரம்... அதிமுக ஆட்சியின் அவலம் என்கிறார் அமைச்சர் சிவசங்கர்!

By காமதேனு

அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால் தான், அரசுப் பேருந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சன்னாசிநல்லூருக்கும், கடலூர் மாவட்டம் நெய்வாசலுக்கும் இடையே வெள்ளாறு ஓடுகிறது. இதில் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரி தங்களுக்கு தான் சொந்தம் என சன்னாசிநல்லூர் மக்கள் கூறிவந்த நிலையில், அங்குள்ள மயானம் வரையிலும் மணல் அள்ளப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இரு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களும் கடந்த 3.1.2015 அன்று ஆற்றை அளவீடு செய்து கல் வைத்து பிரித்தனர்.

கடலூர் நீதிமன்றத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்

ஆனால், சன்னாசிநல்லூர் மக்கள் அதை ஏற்காமல் குவாரியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். அப்போது குன்னம் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் பங்கேற்றார். போராட்டத்தின் போது கலவரம் வெடித்ததில் 9 போலீஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு மணல் அள்ளும் இயந்திரங்களும் அடித்து உடைத்து சேதப்படுத்தப்பட்டது.

பேருந்தில் இருந்து நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று சாலையில் விழுந்தது...

இது தொடர்பாக 9 பிரிவுகளின் கீழ் சிவசங்கர் உட்பட 37 பேர் மீது ஆவினன்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கரிடம், நேற்று திருச்சியில் அரசுப் பேருந்து ஒன்றில் இருக்கையுடன் நடத்துநர் சாலையில் கீழே விழுந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ”அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால் தான் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. புதிதாக 7 ஆயிரம் பேருந்துகள் வாங்க முதலமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார். 350 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதிய பேருந்துகள் வர வர, பழைய பேருந்துகள் அனைத்தும் மாற்றப்படும். இந்த ஆண்டுக்குள் 15 ஆண்டுகள் பழமையான பேருந்துகள் முழுமையாக மாற்றப்படும்.” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE