திருச்சியில் ரூ.20,140 மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவின் தொடக்கமாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட போது முதல்வர் ஸ்டாலின் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு நின்றது சர்ச்சையாகியுள்ளது. முதல்வரின் செயலுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், எ.வ.வேலு, திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் விழாவின் தொடக்கமாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது பிரதமர் மோடி உட்பட அனைவரும் கைகளை முன்னதாக வைத்து நேராக நின்றனர். ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் கைகளை பின்னாடி கட்டிக்கொண்டு நின்றார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ’’தமிழ் தாய் வாழ்த்திற்கு தமிழக முதல்வர் அளிக்கும் மரியாதை இவ்வளவுதானா’’ என பாஜகவினர் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக இந்திய கூட்டணியின் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற போது அவரது இருக்கையின் முன்பாக இந்தியில் ஸ்டாலின் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள்... இன்று முதல் விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
இந்தியாவில் ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்
அதிரடி! ரூ.806 கோடி ஜிஎஸ்டி பாக்கி தொகையை செலுத்த எல்ஐசிக்கு நோட்டீஸ்!
61 உயிர்களை பலிவாங்கிய முகலிவாக்கம் வழக்கு: 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விசாரணை!