மத மோதல்களை தூண்டும் பேச்சு... பிரதமர் மோடி மீது எஸ்டிபிஐ கட்சி போலீஸில் புகார்!

By காமதேனு

இந்தியாவில் மத மோதல்களை உண்டாக்கும் வகையில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் புகார் அளித்தனர்.

புகார் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரஷீத், "மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி மத மோதல்களை தூண்டும் வகையில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 21-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் முஸ்லிம்களுக்கு பங்கிட்டு கொடுத்து விடும் என்றும் ஊடுருவல்காரர்களுக்கும், குழந்தையை அதிகம் பெற்றுக் கொடுப்பவர்களுக்கும் உங்கள் சொத்துகளை பகிர்ந்து அளித்து விடும் என்றும் பேசியிருக்கிறார். மோடியின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மோடி மீது எஸ்டிபிஐ புகார்

இதுபோல, தொடர்ந்து மத மோதல்களை ஊக்குவிக்கும் விதமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் மோடி. இதுகுறித்து உரிய நடவடிக்கையை எடுக்குமாறு அனைத்து மாவட்டங்களிலும் புகார் அளித்து வருகிறோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளோம்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடியும் வரை இதுபோல் பரப்புரை மேற்கொள்ளாத பிரதமர் நரேந்திர மோடி, தற்போது அடுத்த கட்ட வாக்குப்பதிவு தொடங்க உள்ள ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இதுபோல் மத மோதல்களை தூண்டும் வகையில் பேசிவருவது கண்டிக்கத்தக்கது.

மோடி பிரச்சாரம்

குறிப்பாக, தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மத மோதலை உண்டாக்கும் விதமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருவதை தேர்தல் ஆணையம் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக தேர்தல் ஆணையம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தேர்தல் ஆணையம் பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது தெளிவாகிறது. தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE