நீதிமன்றத்தில் நாளை பட்டியலிடப்படும் சொத்துக் குவிப்பு வழக்குகள்: தமிழக அமைச்சர்கள் கலக்கம்!

By காமதேனு

தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்துகுவிப்பு வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை முதல் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

தமிழக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான வழக்குகளை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். இந்த நிலையில், சுழற்சி முறையில் மதுரை உயர்நீதிமன்றத்துக்கு அவர் மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அவர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, நாளை முதல் வழக்குகளை விசாரிக்க உள்ளார்.

ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து எடுத்த பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கை ஜெயச்சந்திரன் விசாரித்து, தண்டனையை உறுதி செய்தார். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் விசாரணை நடத்த உள்ளார்.

தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட தற்போதைய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான வழக்குகள் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை முதல் பட்டியலிடப்பட உள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


2024-ல் தேர்தலைச் சந்திக்கும் 40 நாடுகள்... இந்தியாவுக்கு இந்தத் தேர்தல் எத்தனை முக்கியம்?

புத்தாண்டு பரிசு... வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட்!

ஆபாசமாக உடை அணிந்த மனைவி; கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்: திருமணமான 6 மாதத்தில் பயங்கரம்!

அதிர்ச்சி... மாணவியைக் கடத்தி கூட்டுப் பலாத்காரம்: வீடியோ எடுத்து ரசித்த பாஜக நிர்வாகிகள் கைது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE