இளைஞர் ஒருவர், ஓடும் காரின் கதவில் தொங்கிக் கொண்டிருக்கும் ஆபத்தான ஸ்டண்ட் வீடியோ ஒன்று சமூக வலைத்தங்களில் வைரலாகி கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது.
யூ-ட்யூப், பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் பார்வையாளர்களை வசீகரிக்கவும், லைக்ஸ்களைக் குவிக்கவும் விபரீதம் அறியாமல் பல ஆபத்தான வீடியோக்களைப் பதிவிடும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
சமீபத்தில், இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோ பார்வையாளர்களைப் பதைபதைக்க செய்கிறது. ஓடிக் கொண்டிக்கும் கார் ஒன்றின் கதவில், பிளாஸ்டிக் உதவியுடன் இளைஞர் ஒருவர் ஒட்டிக்கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை இதுவரை 90 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கும் நிலையில், பலரும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
உயிரைப் பணயம் வைத்து இது போன்ற ஆபத்தான ஸ்டண்ட் வீடியோக்களைப் பதிவேற்றும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், பைக் சாகசம், நெருப்பில் சாகசம் செய்வது போன்ற சாகச வீடியோக்களைப் பதிவேற்றுபவர்களின் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வந்தாலும், இன்றைய இளைஞர்கள் அடுத்தடுத்து புகழ், லைக்ஸ்களைக் குறிவைத்து இது போன்ற ஆபத்தான வீடியோக்களை பதிவேற்ற உயிரை பணயம் வைக்கின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
சித்ரா பௌர்ணமி கோலாகலம்... திருவண்ணாமலையில் 5000 போலீஸார் பாதுகாப்பு... 2500 சிறப்பு பேருந்துகள்!
மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் புறப்பட்டது தேர்... மக்கள் வெள்ளத்தில் திணறும் மாமதுரை!
குட் நியூஸ்... மருத்துவக் காப்பீட்டில் மகத்தான மாற்றம்... வயது வரம்பு நீக்கம்!
இந்தியா கூட்டணி கூட்டத்தில் ரகளை... ராஷ்டிரிய ஜனதாதளம் - காங்கிரஸ் கடும் மோதல்!
நேரடி வரி வசூல் 19,58,000 கோடி ரூபாய்... கடந்த நிதியாண்டில் வரி வசூலில் சாதனை!