வாக்குப்பதிவு விவரங்களை செல்போனில் அறிந்து கொள்ளலாம்... புதிய செயலியை அறிமுகம் செய்தது தேர்தல் ஆணையம்!

By காமதேனு

வாக்குப்பதிவு விவரங்களை செல்போன் மூலம் வாக்காளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் புதிய செயலி ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவானது என்ற புள்ளி விவரம் மாநிலங்கள் வாரியாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் நடத்தை விதிமுறைகள் மீறல், பண பட்டுவாடா, அன்பளிப்புகள் குறித்த விவரங்களை உடனடியாக தெரிவிக்க வசதியாக தேர்தல் ஆணையத்தால் ஏற்கெனவே பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது வாக்காளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது அடுத்ததாக வாக்குப்பதிவு விவரங்களை செல்போன் மூலம் வாக்காளர்கள் அறிந்து கொள்ள வசதியாக 'VOTER TURNOUT' என்ற செல்போன் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கி வெளியிட்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் வாக்குப்பதிவு தரவுகளை உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.

வாக்குப்பதிவு

இதில் மக்களவைத் தொகுதிகள் வாரியாகவும், சட்டமன்ற தொகுதிகள் வாரியாகவும் வாக்கு சதவீதம் பட்டியலிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உடனுக்குடன் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு அவ்வபோது பட்டியல் வெளியிடப்படுவதால் இந்த வாக்கு சதவீதம் உத்தேசமானது என்ற குறிப்பும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மணி நேரம் வாக்குப்பதிவு குறித்த விவரங்களை வாக்காளர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.

இதையும் வாசிக்கலாமே...


சித்ரா பௌர்ணமி கோலாகலம்... திருவண்ணாமலையில் 5000 போலீஸார் பாதுகாப்பு... 2500 சிறப்பு பேருந்துகள்!

மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் புறப்பட்டது தேர்... மக்கள் வெள்ளத்தில் திணறும் மாமதுரை!

குட் நியூஸ்... மருத்துவக் காப்பீட்டில் மகத்தான மாற்றம்... வயது வரம்பு நீக்கம்!

இந்தியா கூட்டணி கூட்டத்தில் ரகளை... ராஷ்டிரிய ஜனதாதளம் - காங்கிரஸ் கடும் மோதல்!

நேரடி வரி வசூல் 19,58,000 கோடி ரூபாய்... கடந்த நிதியாண்டில் வரி வசூலில் சாதனை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE