காரில் தொங்கியவாறு சென்ற பிரதமர் மோடி: அயோத்தியில் ரயில் நிலையத்தை திறந்து வைத்தார்!

By காமதேனு

புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார், மேலும் இரண்டு புதிய அமிர்த பாரத் ரயில்கள், ஆறு புதிய வந்தே பாரத் ரயில்களை அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அயோத்தியில் பேரணி சென்ற பிரதமர் மோடி.

அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த விழாவுக்கு ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே உள்ளன. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ரூ.15,700 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்ட பணிகளைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்தி வந்துள்ளார்.

விமான நிலையத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் படேல் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். அதன் பின்னர் பிரதமர் மோடி சாலை மார்க்கமாக பேரணியாகச் சென்றார். வழிநெடுகிலும் பிரதமரை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். காரின் வெளிப்புறமாக நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்தவாறே பிரதமர் மோடி சென்றார்.

அதைத் தொடர்ந்து, ரூ.240 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்ட அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் பின்னர், இரண்டு புதிய அம்ரித் பாரத் ரயில்கள், 6 புதிய வந்தே பாரத் ரயில்கள் ஆகியவற்றை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழாவைத் தொடர்ந்து, அயோத்தி மஹரிஷி வால்மீகி விமான நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். பிரதமர் வருகையால் அயோத்தி விழாக் கோலம் பூண்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

2023ல் 'நியூஸ் மேக்கர்' : பிரதமர் மோடிக்கு விருது!

உஷார்... அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி உள்பட 9 மாவட்டங்களில் மழை!

அதிகாலையில் அதிர்ச்சி... லாரி மோதி 5 பேர் பரிதாப மரணம்!

பகீர்... போதை மாத்திரை விற்பதில் தகராறு... +2 மாணவன் குத்திக்கொலை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE