மக்கள் ஷாக்… நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த எலெக்ட்ரிக் கார்!

By காமதேனு

பெங்களூருவில் எலெக்ட்ரிக் கார் ஒன்று சாலையில் கொழுந்துவிட்டு எரிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

எலெக்ட்ரிக் ரக பைக் மற்றும் கார் அவ்வப்போது எரிவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் பெங்களூருவில் ஒரு கோர சம்பவம் நடந்துள்ளது. ஜே.பி.நகர் பகுதியில் டால்மியா சர்க்கிள் அருகே மின்சார கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

காரில் இருந்து வெளியான கரும்புகையால் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. இதனை அப்பகுதி மக்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. காரை இயக்கி வந்தவர் கவனமாக செயல்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மின்சார வாகனங்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

தொடர்ந்து இதுபோன்று தீ விபத்து ஏற்படுவதால் எலெக்ட்ரிக் வாகனங்களை திரும்பப்பெற வேண்டும் என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் ஜே.பி.நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE