இந்த ஆண்டின் 'நியூஸ் மேக்கர்': பிரதமர் மோடிக்கு கிடைத்த முக்கிய விருது!

By காமதேனு

இந்த ஆண்டின் சிறந்த நியூஸ் மேக்கர் என்ற சிறப்பளிக்கும் விதமாக நியூஸ்மேக்கர் 2023- என பிரதமர் மோடியை இந்தியா டுடே குழுமம் தேர்வு செய்து கவுரவித்துள்ளது.

பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் மிகவும் பரபரப்பான தலைப்பு செய்திகளில் அடிக்கடி இடம் பெறும் பிரபலங்களை இந்தியா டுடே குழுமம் நியூஸ்மேக்கர் என அறிவித்து கவுரப்படுத்தி வருகிறது. இதன்படி இந்த ஆண்டின் நியூஸ் மேக்கராக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அந்த நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்தியாவில் ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது, தனது வெளிநாட்டு பயணங்களின் போது அந்நாட்டு தலைவர்களுடனான நட்புறவு, போன்றவற்றால் தேசிய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் 2023-ம் ஆண்டு தலைப்பு செய்தியாக பிரதமர் மோடி இடம் பெற்றுள்ளார். இதையடுத்து பிரதமர் மோடியை இந்தியா டுடே நியூஸ்மேக்கர் 2023 என தேர்வு செய்து அறிவித்தது.

இந்தியா டுடே

இது தொடர்பாக இந்தியா டுடே குழும தலைவர் அருண் பூரி,, துணைத் தலைவர் கலில் பூரி ஆகியோர் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து இதற்கான விருதை வழங்கினர். தவிர 2024 ஜன.8-ம் தேதி வெளியாக உள்ள 'இந்தியா டுடே' இதழில் பிரதமர் மோடியின் படம் கவர்ஸ்டோரியாக வெளியாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE