நடிகர் சித்தார்த்துக்கும் காவிரி பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்?... சீமான் ஆவேசம்!

By காமதேனு

காவிரி பிரச்சினைக்கும், நடிகர் சித்தார்த்துக்கும் என்ன சம்பந்தம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்திருக்கும் படம் ‘சித்தா’. இந்தத் திரைப்படத்தின் புரோமோஷனுக்காக கர்நாடகா சென்ற நடிகர் சித்தார்த் காவிரி விவகாரத்தால் சில கன்னட அமைப்பினரால் நிகழ்வில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சிவராஜ்குமார் இருவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்,, ”காவிரி விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் பேசி ஒரு தீர்வு காண வேண்டும். ஒரு கலைஞனிடம் கேட்பது என்ன நியாயம். இது மாதிரி கன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎஃப் படத்தின் இரண்டு பகுதி வெளிவந்தது.

நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு

அதற்கு தமிழகத்தில் நாம் எந்த இடையூறும் செய்யவில்லை. வரவேற்பு தான் வழங்கினோம். ஆனால், அவர்கள் விஜய் படத்தையோ மற்ற நமது நடிகர்கள் படத்தையோ திரையிட விடுவது இல்லை. நடிகர் சித்தார்த் ஒரு கலைஞன். அவருக்கும், தண்ணீர் பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு நடிகரிடம் எப்படி இது போல் கேள்வி கேட்க முடியும்?

அந்த அரங்கத்துக்குள் காவலர்கள் இருந்தும் கேள்வி கேட்டவர்களை ஏன் தடுக்கவில்லை. இது தமிழ்நாடு மாநிலத்தில அப்படி செய்தால் அவர்கள் கைது செய்து பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வார்கள். அந்த அடிப்படை பண்பு கூட அந்த மாநிலத்தில் ஏன் இல்லை? இதெல்லாம் கடுமையாக கண்டிக்கத்தக்கது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

மகாளய பட்சம் : இன்று முதல் அடுத்த 15 நாட்களை மிஸ் பண்ணாதீங்க... பித்ரு தோஷம் நீங்க சிறந்த வழிபாடு!

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளை இப்படி தரிசித்தால் தரித்திரம் விலகும்’; செல்வம் சேரும்!

நாளை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்!

சென்னையில் அதிர்ச்சி... பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

காதல் கணவர் வேண்டும்! வீட்டின் முன்பு 35 நாட்களாக மனைவி தர்ணா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE