விஜயகாந்துக்கு யாரோ செய்வினை வைத்து விட்டார்கள்... பீதியைக் கிளப்பும் கங்கை அமரன்!

By காமதேனு

அரசியலில் வேகமாக வளர்ந்து வந்த விஜயகாந்துக்கு பேச்சு வராமல் போனதற்கும் கை, கால்கள் செயலிழந்து முடங்கியதற்கும் செய்வினைதான் காரணம் போல் தெரிவதாக இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் பீதியை கிளப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விஜயகாந்துக்கு அமெரிக்கா உட்பட உலகின் தலைசிறந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் அவர் பழைய தெம்புடன் குணமடையாமல் போனது ஏமாற்றத்தை அளித்தது. ஆன்மிகத்தின் மூலம் விஜயகாந்துக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைச் சரி செய்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

விஜயகாந்துக்கு இறக்கும் வயதே இல்லை. இன்னும் எவ்வளவோ காலம் அவர் இருந்திருக்க வேண்டியவர் என்பதையும் நினைக்கும் போது மனம் வேதனை அடைகிறது.

விஜயகாந்த்

நானும், அண்ணன் இளையராஜாவும் விஜயகாந்த் படங்களுக்கு மிக அதிகமாக இசையமைத்து கொடுத்துள்ளோம். மேலும், விஜயகாந்தை வைத்து 2 படங்கள் இயக்கியுள்ளேன்" என்று கூறினார்.

மேலும், " கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்தை தன்னால் பார்க்கமுடியவில்லை என்றும் பார்த்திருந்தால் ஆன்மிகவாதிகள் மூலம் உடல்நலத்தை சரி செய்ய அறிவுறுத்தியிருப்பேன்.

விஜயகாந்துக்கு யாரால் கை, கால்கள் முடக்கப்பட்டது. யாரால் பேச்சு வராமல் போனது என்பதை நினைத்தால் உலகில் இப்படியுமா நடக்கும் என எண்ணத் தோன்றுகிறது" என்றார். கங்கை அமரனின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...
அதிகாலையிலேயே அஞ்சலி செலுத்த குவிந்த தொண்டர்கள்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

'கேப்டன்' பெயர் விஜயகாந்திற்குப் பொருத்தமானது... நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்... தங்கம் விலை குறைந்தது!

செல்போனை கேட்டதால் விபரீதம்... கணவன் கண்ணில் கத்திரிக்கோலால் குத்திய மனைவி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE