டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் நாளை தமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள் நடத்த பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே போல் வெயிலும், மழையும் மாறி மாறி வருவதால் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள் மற்றும் நகர் நல அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மறு உத்தரவு வரும் வரை நாளை முதல் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
மூவர் அல்லது அதற்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்த இடத்திற்கு முன்னுரிமை அளித்து முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்து முகாம் நடத்த வேண்டும்.
வீடு வீடாக சென்று டெங்கு, ப்ளூ காய்ச்சல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளவும், அறிகுறிகள் இருந்தால் அதற்கான உரிய சிகிச்சைகள் வழங்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
மகாளய பட்சம் : இன்று முதல் அடுத்த 15 நாட்களை மிஸ் பண்ணாதீங்க... பித்ரு தோஷம் நீங்க சிறந்த வழிபாடு!
புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளை இப்படி தரிசித்தால் தரித்திரம் விலகும்’; செல்வம் சேரும்!
நாளை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்!
சென்னையில் அதிர்ச்சி... பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
காதல் கணவர் வேண்டும்! வீட்டின் முன்பு 35 நாட்களாக மனைவி தர்ணா!