வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சான்றிதழ்கள்: கட்டணமில்லாமல் பெற நாளை சிறப்பு முகாம்!

By காமதேனு

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சான்றிதழ்களை இழந்தவர்கள் கட்டணம் இல்லாமல் சான்றிதழ்களைழு பெறும் வகையில், மாவட்டத்திற்குட்பட்ட 8 வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை(டிச.29) சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அறிவிப்பு

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘’திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமழை வெள்ளப் பாதிப்பினால் பிறப்பு, இறப்பு சான்று, இருப்பிடச் சான்று, பிறப்பிடச் சான்று, சாதிச்சான்று போன்ற சான்றிதழ்களை இழந்தவர்கள் அந்த சான்றிதழ்களின் நகல்களை பெறுவதற்கு வசதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

இச்சிறப்பு முகாம்களில் மழை வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்தவர்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

கனமழையால் வெள்ளம்

மழை வெள்ளப் பாதிப்பினால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள www.mycertificates.in என்ற உயர் கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்து கட்டணமின்றி தங்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இணையதளத்தில் பதிவு செய்து குறித்த சந்தேகங்களுக்குத் தெளிவு பெற தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தின் 1800 423 0110 என்ற எண்ணிலும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் கண்காணிப்பு அறையின் கட்டணமில்லா அலைபேசி எண் 1077 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE