வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

By காமதேனு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.டி கல்லூரியில் தனது வாக்கினை செலுத்தினார்.

தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

வரிசையில் காத்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் இன்று தனது வாக்கினை செலுத்தினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அவர் பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை செலுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE