பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் இருந்து சனாதன கருத்துகள் நீக்கம்... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!

By காமதேனு

சனாதனம் சர்ச்சையைத் தொடர்ந்து 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து சனாதனம் அடுத்த ஆண்டு நீக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

பாடப்புத்தகம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடநூலில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, தமிழக அரசின் 12-ம் வகுப்பு 'அறிவியலும் இந்திய பண்பாடும்' எனும் பாட புத்தகத்தில் அமைச்சர் உதயநிதி கூறிய கருத்துக்கு எதிராக 'சனாதனம் ஓர் அறம். வர்ணாஸ்ரமத்தில் உயர்வு தாழ்வு இல்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

சமூக வலைதளங்களில் இது தொடர்பான வாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், "இந்த புத்தகம் கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் அச்சடிக்கப்பட்டது. எனவே, தமிழக அரசு இதனை மாற்ற வேண்டும்" என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

இதற்குப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார். அதாவது, "2018-ம் ஆண்டு கொண்டு வந்த பாடப்புத்தகத்தில் சனாதனம் குறித்த பகுதி இடம்பெற்றுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படுவதால் அடுத்தாண்டு பாடப்புத்தங்கங்கள் மாற்றியமைக்கப்படும். இருப்பினும் இவ்விவகாரம் குறித்து ஆராய கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது" என கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE