அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு எதிரானவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) ஆதரவாக பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த தேர்தல் திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை தண்டிக்க மட்டுமே. இந்தத் தேர்தல் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்கள் மற்றும் இந்தியாவை விக்சித் (வளர்ச்சியடைந்த) பாரதமாக மாற்றும் மத்திய அரசின் முயற்சிகளை எதிர்ப்பவர்களைத் தண்டிக்கும்.
காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டாளிகளும் என்னை வசைபாடுவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரில் பொய்களைச் சொல்கிறார்கள். என்டிஏ கூட்டணி அரசு, அரசியலமைப்பை மதிக்கிறது. அம்பேத்கரால் கூட இதை மாற்ற முடியாது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா என அழைக்கின்றனர். அவர்கள் ஒரு தொகுதியில் வெற்றி பெற கூட தகுதி இல்லாதவர்கள். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஊழல் மற்றும் ரவுடிகள் ராஜ்ஜியத்தின் அடையாளம். பீகாருக்கு காட்டாட்சி மற்றும் ஊழலை மட்டுமே ஆர்ஜேடி தந்துள்ளது.
ஆர்ஜேடி-யும், காங்கிரஸும் சமூக நீதியை பெயரளவில் மட்டுமே கொண்டு அரசியல் செய்கின்றன.” என்றார்.
பீகார் முன்னாள் முதல்வரும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்) நிறுவனருமான ஜிதன் ராம் மாஞ்சி, கயா தொகுதியில் என்டிஏ கூட்டணி வேட்பாளராக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!
நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!
மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!