ஒபாமாவே அஞ்சு வருஷம் தான்... பிரதமர் பதவியை காலி பண்ணுங்க மோடி... முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆவேசம்!

By காமதேனு

"ஓபாமா கூட 5 ஆண்டுகள் தான் ஆட்சி நடத்தினார். அதனால் பிரதரமர் நாற்காலியை காலி செய்யுங்கள் மோடி" என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் நேற்றிரவு வாக்குகளை சேகரித்தார். அப்போது மக்களிடையே பேசிய அவர், இந்த தேர்தல் என்பது மத்தியிலே யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிக்கக் கூடியது. மோடி தலைமையிலான பாஜக அரசு பத்தாண்டுகளாக இந்தியாவை ஆட்சி புரிந்தது. இந்த 10 ஆண்டு என்பது குறுகிய காலம் அல்ல. உலக நாடுகளிலே ஒபாமா உள்பட யாராக இருந்தாலும் 5 ஆண்டுகள் தான் ஆட்சி புரிந்துள்ளனர். பத்தாண்டுகளில் இவர்கள் நாட்டிற்கு என்ன செய்தார்கள். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா.. இல்லையா.. என்பதுதான் கேள்வி.

தகுதி உள்ளவர்கள் எதனை விட்டுச் சென்றார்களோ அதை வைத்து தான் அவர்களை மதிப்பிட முடியும். அது போன்று மோடி அரசு இரண்டு விஷயங்களை தான் விட்டுச் சென்றுள்ளனர். ஒன்று விலைவாசி உயர்வு, மற்றொன்று வேலை வாய்ப்பின்மை. இன்று அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அதிக உச்சத்தில் உள்ளது. கேஸ் விலை காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது 400 ரூபாயாக இருந்தது. இன்று ஆயிரம் ரூபாய்க்கு மேலாக உள்ளது. ஏன் இவர்களால் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை. எதற்காக இந்த அரசு இருக்க வேண்டும். பத்தாண்டுகளில் உங்களின் முகத்திரை கிழிந்து விட்டது. நீங்கள் நாற்காலியை காலி செய்யுங்கள்.

வேறொரு கட்சி ஆட்சிக்கு வரட்டும். அடுத்த தலைமுறை வரட்டும். அது புத்திசாலியான தலைமுறை. பாஜகவை ஒழிக்க வேண்டும் என கூறவில்லை, காங்கிரசை அழிக்க வேண்டும் என்று பாஜகதான் சொல்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு 3 ஆண்டுகளில் முத்தான பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக காலை உணவு திட்டம் என்ற உணவு திட்டத்தை செயல்படுத்தி பள்ளி குழந்தைகளின் வாழ்வில் ஒளியை ஏற்படுத்தி உள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அமல்படுத்துவோம்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


இன்றும், நாளையும்.... சென்னை வானிலை மையம் தந்த சர்ப்ரைஸ்!

பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரை சுற்றி வளைத்த தேர்தல் பறக்கும் படை!

கும்பிடுவது போல கையை வைத்து கொண்டு தானே காருக்குள் இருந்தேன்... போலீஸாருடன் அண்ணாமலை வாக்குவாதம்!

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளால் பயங்கரத் தாக்குதல்... வெள்ளை மாளிகை முக்கிய அறிவிப்பு!

என்னைப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கிறார்கள்... பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE