அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டம் அறிவிப்பு!

By காமதேனு

ஜனவரி 6ம் தேதி முதல் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் டிச.30, 31 மற்றும் ஜன 2 ஆகிய தேதிகளில் அனைத்து பேருந்து நிலையங்களிலும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து ஜன.4 அன்று பெருந்திரள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் குறித்து அவர்கள் முறைப்படி நோட்டீஸ் கொடுத்துள்ளதால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது உறுதி என தெரியவந்துள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொது மக்களின் பயணங்கள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு டிசம்பர் 27ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பேச்சுவார்த்தையில் சமரச முடிவு எட்டப்பட்டால் வேலை நிறுத்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்படலாம். இல்லையெனில் பொங்கல் பண்டிகை விடுமுறை காலங்களில் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடும்.


இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு... விண்ணை பிளந்த கோவிந்தா... ரங்கா கோஷம்!

அதிர்ச்சி... 8வது மாடியிலிருந்து அறுந்து விழுந்த லிப்ட்; உயிருக்கு போராடும் 5 ஊழியர்கள்

47 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

2023 Rewind | சிவகார்த்திகேயன் முதல் த்ரிஷா வரை... பிரபலங்களைச் சுழற்றியடித்த சர்ச்சைகள்!

பாலச்சந்தர் நினைவு தின பகிர்வு | விசிட்டிங் கார்டு கொடுத்த எம்.ஜி.ஆர்... வளர்த்தெடுத்த நட்சத்திரங்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE