உடல் நலக்குறைவால் உயர்நீதிமன்ற நீதிபதி மரணம்!

By காமதேனு

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி கைலாஷ் பிரசாத் தியோ காலமானார். அவருக்கு வயது 56.

நீதிபதி கைலாஷ் பிரசாத் தியோ சமீப காலமாக தீராத நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர், ராஞ்சியில் உள்ள மெடிகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காததால், நீதிபதி கைலாஷ் பிரசாத் தியோ உயிரிழந்தார். அவரது மறைவு நீதித்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து நீதிபதி கைலாஷ் பிரசாத் தியோவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு சொல்லப்பட்டது.

நீதித்துறையினர் மரியாதை செலுத்திய பிறகு உடல் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நேரில் அஞ்சலி செலுத்தினார். இவரது மறைவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE