கர்நாடகாவில் வலுக்கும் போராட்டம்... தமிழர்களுக்கு பலத்த பாதுகாப்பு!

By காமதேனு

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தரக்கூடாது என கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கு தமிழர்கள் வசிக்கும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்துவிடுமாறு கடந்த 18-ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், கர்நாடக அரசுக்கு உத்தரவிரப்பட்டது. இதனை எதிர்த்து கர்நாடகா அரசு, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினர், விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மண்டியா மாவட்டம் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தின் போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோருக்கு எதிராகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பப்பட்டது.

காவிரிமேலாண்மை ஆணையம் தனது உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் தண்ணீரை நிறுத்தவும் வலியுறுத்துகின்றனர். இதனால் கர்நாடகா முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE