டாஸ்மாக் பணியாளர்கள் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு!

By காமதேனு

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் கொடுக்கும் துறைகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும் ஒன்று. ஏனென்றால் இதன்கீழ்தான் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடை பணியாளர்கள் அதிரடியாக போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர்.

பணி நிரந்தரம், காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை டாஸ்மாக் பணியாளர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் உடனடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும், முழுமையான இ.எஸ்.ஐ. மற்றும் பி.எஃப். உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

எனவே இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தை வரும் அக்டோபர் 2-ம் தேதி முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE