நீதிமன்றத்தில் கதறியழுத பொன்முடி மனைவி!

By காமதேனு

சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை வாசித்ததும் அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சி கதறி அழுதார். அவரை பொன்முடி தரப்பு வழக்கறிஞர்கள் சமாதானப்படுத்த முயன்றனர்.

இன்று சொத்துக்குவிப்பு வழக்கில், அபராதத் தொகையுடன் தண்டனை முடிந்து விடும் என்று பெரிதும் எதிர்பார்த்தே பொன்முடியும், அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். உடன் அவரது மகனும் வந்திருந்தார். இந்நிலையில், அபராதத் தொகையை எதிர்பார்த்த விசாலாட்சிக்கு ஏமாற்றமாக, அபராதத் தொகையுடன் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. 3 ஆண்டு சிறை தண்டனையைக் கேட்டதும் பொன்முடியும், அவரது மனைவியும் அதிர்ச்சியடைந்தனர். தீர்ப்பைக் கேட்டதும் கதறியழுத பொன்முடி மனைவி விசாலாட்சியை அவரது தரப்பு வழக்கறிஞர்கள் சமாதானப்படுத்த முயன்றனர்.

முன்னதாக, சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் இருவரும் மேல்முறையீடு செய்ய வசதியாக தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார். அதே சமயம், இந்த தீர்ப்பில் நூலிழையில் அமைச்சர் பொன்முடி தப்பித்தார் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சட்டப்படி 3 ஆண்டுகளோ அல்லது அதற்கும் மேலான காலத்திற்கோ தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், மேல்முறையீடு செய்யும் வரை தண்டனை காலத்தை நிறுத்தி வைக்க முடியாது. சரியாக 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக 1 மாதம் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், உடனடியாக சிறை சென்றிருக்க வேண்டியது தான் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

இதையும் வாசிக்கலாமே...


திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி | நாளை முதல் 4 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம்!

நீதிமன்றத்தில் கதறியழுத பொன்முடி மனைவி!

கிறிஸ்துமஸ் 2023 | ஜொலிஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

திமுக முன்னாள் அமைச்சரின் மகன் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை!

நெகிழ்ச்சி... ஏலத்துக்கு வந்த பள்ளி மாணவனின் வீடு... மீட்டுக் கொடுத்த சக நண்பர்கள், ஆசிரியர்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE