நீர்வழிப் படுஊம் நாவலுக்காக இவ்வாண்டிற்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் தேவிபாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மொழி மற்றும் இலக்கியத்திற்கான குறிப்பிடத்தக்க பங்களிப்புகளாக சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 24 மொழிகளில், தேர்வு செய்யப்பட்ட படைப்புகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்வாண்டு தேர்வு செய்யப்படும் எழுத்தாளர்களுக்கு வருகிற 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இதன்படி 2024ம் ஆண்டிற்காக விருதாளர்களின் பட்டியல் தற்போது டெல்லியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் மொழியில் ‘நீர்வழிப் படுஊம்’ நாவலை எழுதிய தேவிபாரதிக்கு இவ்வாண்டிற்கான தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவிபாரதி எனும் புனைப்பெயரில் எழுதி வரும் எழுத்தாளர் ராஜசேகரன், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர். நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ், நீர்வழிப் படூஉம், நொய்யல் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். பலி, பிறகொரு இரவு, வீடென்ப, கண் விழுத்த மறுநாள், தேவிபாரதி தேர்ந்தெடுத்த சிறுகதைகள், மூன்றாவது விலா எலும்பும் விழுதுகளற்ற ஆலமரமும் ஆகிய சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ளார்.
இதே போல் புழுதிக்குள் சில சித்திரங்கள், அற்ற குளத்து அற்புத மீன்கள், சினிமா பாரடைசோ உள்ளிட்ட கட்டுரைத்தொகுப்புகளையும் எழுதியுள்ளார். ‘காலச்சுவடு’ இதழின் பொறுப்பாசிரியராகப் ஏழாண்டு காலம் பணிபுரிந்துள்ளார். தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘கனவே கலையாதே’ திரைப்படத்தில் கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார் தேவிபாரதி.
இதையும் வாசிக்கலாமே...
இன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார் சனிபகவான்... திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்!
2023 Rewind | மனதை உலுக்கிய மரணங்கள்... மீளா துயரில் ஆழ்த்திய பிரபலங்கள்!
கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இளம்பெண்!
அதிர்ச்சி... கொசுமருந்தை குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
குட் நியூஸ்... அரிசி விலை குறையப்போகிறது; மத்திய அரசின் ஏற்பாடுகள் தீவிரம்!