நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம்... முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

By காமதேனு

’’பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ மேற்படிப்பில் சேரலாம் என்ற அறிவிப்பின் மூலம் நீட் தேர்வு அர்த்தமற்றது என்பதை பாஜக அரசே ஒப்புக் கொண்டுள்ளது’’ என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு

ஜூலை 27-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில், தற்போது வரை 3 சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. ஆனால், நாட்டின் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஏராளமான மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதால், நீட் தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் காரணமாக , காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வால் மாணவர்களின் திறனை மேம்படுத்த முடியாது எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது அதனை உறுதிசெய்யும் விதமாக வெளியான இந்த அறிவிப்பை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதனை விமர்சிக்கும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ‘’ மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வின் பயன் பூஜ்ஜியம் தான் என்பதை, மத்திய பாஜ அரசு ஒப்புக் கொண்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் கட் ஆப் மதிப்பெண் ஜீரோ என குறைத்தது. தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு அர்த்தமற்றதாகிவிட்டது.

நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு பணம் செலுத்துவதோடு நின்றுவிடுகிறது. தகுதி என்பது தேவையற்றதாகி விடுகிறது. நீட் தேர்விற்கும் தகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நீண்ட காலமாக கூறி வருகிறோம். இது எந்த உண்மையான தகுதி அளவுகோலும் இல்லாமல் வெறும் சம்பிரதாயமாகிவிட்டது.

பல உன்னதமான உயிர்கள் இழந்தாலும் மனம் தளராத மத்திய அரசு தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது. பல உயிர்களை பழிவாங்கும் நீட் தேர்வை மத்திய அரசு நீக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE