வேலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சதமடித்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் நேற்றிரவு முதல் விடியும் வரை தொடர்ந்து மழை பெய்தது.
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்று 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.