வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழா: முதல்வர் ஸ்டாலினை அழைக்க முடிவு

By பெ.ஜேம்ஸ் குமார்

மறைமலை நகர்: வே.ஆனைமுத்துவின் நூற்றாண்டு விழாவில், முதல்வர் ஸ்டாலினை அழைத்து பங்கேற்க வைத்து ஆனைமுத்து தொகுத்து வெளியிட்ட பெரியார் ஈவெரா சிந்தனைகள் புத்தகத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மறைமலைநகர் திருவள்ளுவர் மன்றத்தின் சார்பாக வே.ஆனைமுத்துவின் நூற்றாண்டு விழா சிறப்புக் கூட்டம் கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் மறைமலை நகரில் நடைபெற்றது. திருவள்ளுவர் மன்றத்தின் செயலாளர் மா. சமத்துவமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வாலாசா வல்லவன் சிறப்புரையாற்றினார்.

விழாவில் ஆனைமுத்து முத்த மகன் ஆனை பன்னீர் செல்வம், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் காஞ்சி அமுதன், திராவிடர் விடுதலைக் கழகம் - இரவி பாரதி, மே 17 இயக்கம் - கொண்டால் சாமி, தாம்பரம் சிந்தனைக்கூடம் - துரை.மணிவண்ணன், மறைமலைநகர் பொது நலச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மு.அரங்கநாதன், திராவிடர் கழகம் - ம.வெங்கடேசன், பகுத்தறிவாளர்கள் கழகம் - மு.பிச்சைமுத்து மற்றும் தாம்பரம் சுப்பிரமணி, பேராசிரியர்கள் கனக விநாயகம், ராமசாமி ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். இதில் முன்னதாக திருவள்ளுவர் மன்றத்தின் துணை செயலாளர் க.பழனி வரவேற்றார். பொருளாளர் லெனின் காவேரி செல்வம் நன்றி கூறினார்.

கூட்டத்தில் ஆனைமுத்து தொகுத்து வெளியிட்ட பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொடர்ந்து தொகுத்து வைத்துள்ள பெரியார் வாழ்க்கை வரலாறு ஆனைமுத்து நூற்றாண்டில் வெளியிடவும், ஆனைமுத்து நூற்றாண்டின் நிறைவாக தமிழக முதல்வர் ஸ்டாலின் திராவிட கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி மற்றும் கருச்சட்டை தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் விழா ஏற்பாடுகள் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE